மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைப்பு விழா

கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் மேடை பேச்சு:

  • கோவை செல்வராஜ் அதிமுகவில் இருந்தபோது விவாதமேடையில் பேசுவார். அவர் பேசும்போது வெளிப்படையாக பேசக்கூடியவர்.சில நேரங்களில் என்னை திட்டியிருக்கிறார். இதனால் தான் தீட்டதீட்ட வைரம் மிண்ணுவதைப் போல திமுக வைரமாக பட்டை தீட்டப்பட்டிருக்கிறது.திமுக தாய்க்கழகம். இதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. அண்ணா ஆட்சிக்கு வரவேண்டும் என்ற அடிப்படையில் கட்சியை தொடங்கவில்பலை.திமுக ஆட்சிக்காக மட்டுமல்ல. ஏழை எளிய மக்களுக்கு, விவசாயிகளுக்கு, தமிழ் இனத்துக்காக தொடங்கப்பட்டது.திடீர் திடீரென தோன்றும் கட்சிகள், கட்சியை தொடங்கும்போதே நாங்கள் தான் அடுத்த முதலமைச்சர் என்கின்றனர். ஆனால் பின்னர். அனாதைகளாக அலைகின்றனர்.1949 ல் தொடங்கிய திமுக முதன்முதலில் தேர்தல் களத்தில் 57 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தான் இறங்கியது.அதுவும் தேர்தலில் ஈடுபடலாமா வேண்டாமா என்பதை தொண்டர்கள் முடிவு செய்யுமாறு சீட்டு தரப்பட்டது.அதிகமானோர் தேர்தலில் ஈடுபட வாக்களித்ததை அடுத்து தேர்தலில் ஈடுபட்டோம்.

திமுக சார்பில் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டோம். குளித்தலை தொகுதியில் இருந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 50 பேர் வெற்றி பெற்றோம். 67 ம் ஆண்டு அண்ணா தலைமையில் ஆட்சிப்பொறுப்பு ஏற்றோம்.
1949 ல் கட்சி தொடங்கினாலும் 67 ல் தான் ஆட்சி அமைத்தோம்.அண்ணா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டுதான இருந்தார். ஆனால் அவரது திட்டங்களில் சீர்திருத்த திட்டம், இருமொழிக்கொள்கை, தமிழ்நாடு என பெயர் சூட்டியது என 3 தீர்மானங்கள் தமிழர்களுக்கு பெருமை.71 ல் மீண்டும் சட்டமன்ற தேர்தலில் 184 இடங்களில் வெற்றி பெற்று முதலமைச்சராக கருணாநிதி ஆட்சிக்கு வந்தார்.அவர் 5 முறை முதலமைச்சராக இருந்தபோது பட்ட இன்னல்கள் அதிகம்.

75 ல் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது.

பலர் கைது செயப்பட்டனர்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருந்தது. இப்போது கலைஞருக்கு டெல்லியிலிருந்து தூது வந்தது. நெருக்கடி நிலையை எதிர்த்தால் ஆட்சியை கவிழ்த்துவிடுவோம் என்றார்கள். ஆனால் கலைஞர் பயப்படவில்லை. உடனடியாக கூட்டத்தை கூட்டி கடற்கரையில் எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்.அடுத்தநாளே ஆட்சி கலைக்கப்பட்டது.நாங்கள் மிசா கைதியாக சிறையில் அடைக்கப்படோம்.கலைஞர் ஆட்சியைப் பற்றி் கவலைப்படவில்லை.
தொடர்ந்து தேர்தலில் வெற்றி தோல்வியை சந்தித்தோம்.89 ல் 13 வருடத்துக்கு பிறகு ஆட்சிக்கு வந்தோம்.91ல் மீண்டும் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. விடுதலை புலிகளுக்கு துணை நிற்பதாக அபாண்ட பலியை சுமத்தினர்.அடுத்து 1996 ல் மீண்டும் ஆட்சி. 2006 ல் மீண்டும் 5 முறையாக கலைஞர் ஆட்சி பொறுப்பேற்றார்.இப்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு 6 வது முறையாக எனது தலைமையில் ஆட்சி நடக்கிறது.

வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாத கட்சி திமுக

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்.தேர்தல் அறிக்கையில் சொல்லாததையும் செய்து வருகிறோம்.கல்லூரி்மாணவிகளுக்கு 1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்படாத திட்டம்.ஈரோடு கிழக்கு தொகுதியில் அப்போது 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றோம்.
இப்போது 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம்.
வெற்றிக்கு காரணம் ஆட.சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கைதான். அதனால் தான் இவ்வளவு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம்.நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும்.மதத்தை பயன்படுத்தி ஜாதியை பயன்படுத்தி, குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதன் மூலம் ஆட்சியை வீழ்த்திவிடலாம் என்றெல்லாம் கனவு கண்டு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.நமது இலக்கு நாடாளுமன்ற தேர்தல்தான்நாடும் நமது நாளையும் நமதே என்ற அடப்படையில் வெற்றிக்கான வியூகம் வகுத்து புதுவையையும் சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றியை பெற்றாக வேண்டும்.