தேனிவீரபாண்டிகௌமாரியம்மன்விழா தொடக்கம்

0 27

தேனியிலிருந்து கண்ணன்

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி புதன்கிழமை கம்பம் நடும் விழா நடைபெறுகிறது
முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு கோயில் வீட்டில் இருந்து அம்மன் கரகத்துடன் கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. சித்திரை திருவிழாவையொட்டி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லெட்சுமிபுரத்தில் உள்ள செங்குளம் கரை பகுதியில் இருந்து கம்பம் கொண்டு வரப்பட்டு, புதன்கிழமை காலை கோயிலில் கம்பம் நடும் விழா நடைபெற்றது. கம்பத்துக்கு பக்தர்கள் மஞ்சள் நீரூற்றி வழிபட்டனர்.
மேலும் கோயிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் மஞ்சள் காப்பு அணிந்து விரதம் தொடங்கினர். முக்கியத் திருவிழா மற்றும் தேரோட்டம் வரும் மே 7-ஆம் தேதி தொடங்கி
14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.