தேனியில் மே 10தேதிஉள்ளூர் விடுமுறை -ஆட்சியர் அறிவிப்பு

0 512

வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா தேரோட்டம் மே மாதம் பத்தாம் தேதி உள்ளுர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் சஜீவனா அறிவிப்பு.

உலக பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழா வரும் மே மாதம் ஏழாம் தேதி துவங்கி 14ஆம் தேதி வரை எட்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதில் நான்காம் நாள் நிகழ்ச்சியாக மே மாதம் பத்தாம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டம் வெகு விமர்சையாக நடக்க உள்ள நிலையில் தேனி மாவட்டத்திற்கு மே மாதம் 10ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சஜீவனா உத்தரவிட்டார்.

இந்த உள்ளூர் விடுமுறையில் தேனி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு துறை அலுவலகங்கள் அனைத்து விதமான கல்வி நிலையங்களுக்கு அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர பாதுகாப்பு பணிகளுக்காக குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு குறிப்பிட்ட அலுவலகங்கள் மட்டும் செயல்பட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மே மாதம் 25ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.