தேனி மேற்கு தொடர்ச்சி மலைகளில் காட்டுத்தீ!

0 588

⨼΂΂΁΂΂΁΂΂΁⨽
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள முருகமலை வனப்பகுதியில், பாம்பார் காப்புக்காடு, தொண்டகத்தி உள்ளிட்ட பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டு தீ பற்றி எரிந்து வந்தது.

இதனைத் தொடர்ந்து தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர், தீ தடுப்பு காவலர்கள் மற்றும் மலை கிராம இளைஞர்கள் என 25க்கும் மேற்பட்டோர் 2 நாட்களாக போராடி வருகின்றனர்

இந்த நிலையில் தேவதானப்பட்டி வனச்சரகர் வனப்பகுதியில் காட்டு தீ பற்றியதக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில், பெரியகுளம் அருகே உள்ள எ.புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் தொண்டகத்தி பகுதியில் பட்டா நிலத்தில் விவசாயம் செய்து வரும் நிலையில் விவசாய கழிவுகளுக்கு தீ வைத்த போது அருகே இருந்த வனப்பகுதியில் தீ பற்றியதாக விசாரணையில் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினரால் விவசாயிகள் இருவர் மீதும் 1882 ஆம் வருட தமிழ்நாடு வனச் சட்டம் 5/21கீழ் வழக்கு பதிவு செய்து செய்துள்ளனர்.

 தேனி.MA.கண்ணன்
Leave A Reply

Your email address will not be published.