மாண்யங்களையும்,நிதி ஒதுக்கீடுகளையும் குறைத்து வருகிறது. அதனை ஈடுசெய்யும் வகையில் ஒடிசா அரசு தனது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டை கூடுதலாக்கி உள்ளோம்
எனவே பயணத்தில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகளை ஒடிசா அரசு முழுமையாக ஆதரிக்கிறது. நாங்களும் வலியுறுத்துவோம் என முதலமைச்சர் கருத்து தெரிவித்தார்
தங்கள் பயணத்தில் எங்கள் அரசின் கோரிக்கையாக பெண் விவசாயிகள் குழுக்களை ஏற்படுத்தி விவசாய உற்பத்தியை பெருக்குவதற்கும், பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை உருவாக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.
முன்னதாக பயணக்குழுவினரை தனது அலுவலகமான கிசான் பவன்க்கு வரவழைத்து அனைவருக்கும் ரோஜா மலர்கொடுத்து, உயர்ரக கைத்தறி ஆடை அணிவித்து வெற்றி பெற வாழ்த்துக்களை முதலமைச்சர் நவீன் பட்னாயக் சார்பில் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்த அமைச்சர் ஆர் பி ஸ்வைன் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
இச்சந்திப்பு மிகுந்த நம்பிக்கையும், தைரியத்தையும் ஏற்படுத்தியது. இதற்காக ஏற்பாடுகளை ஒடிசா மாநில விவசாயிகள் சங்க தலைவரும் பயணக்குழுவில் இடம்பெற்றுள்ள சச்சின் மகோபாத்ரா செய்திருந்தார்.
தகவல்
வி.கே.வி.துரைசாமி.
பொது செயலாளர்.