இராமநாதபுரம் மாவட்டம்- தொண்டியில் கல்வித்துறையில் சிறப்பாக செயல்பட்டுவரும் அமீர் சுல்தான் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஐநா பாதுகாப்பு அமைப்பின் சார்பில் ஜி 20 மாநாட்டிற்கு நம் இந்திய திருநாட்டை தலைமை தாங்க வைத்த மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 154 மாணவர்கள் ஜி 20 வடிவத்தில் நின்று ஐநா வின் 17 Sustainable Development Goals விழிப்புணர்வு அளித்தனர். 20 நிமிடங்கள் 20 நொடிகள் நடைப்பெற்ற இந்த நிகழ்வை சர்வதேச ஐக்கிய கலாம் உலக சாதனை புத்தகத்தில் உலக சாதனையாக 21/03/2023 அன்று அங்கிகரீக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ஐநா பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகிகள் டாக்டர்.செந்தூர், ஜோயல் ஜர்வீஸ்,சாய் பாலாஜி, அறிவழகன் மற்றும் பள்ளியின் தாளாளர் அப்துல் ரவூப் நிஸ்தார், பள்ளியின் முதல்வர் ஹரி மற்றும் பள்ளி ஒருங்கிணைப்பாளர் முகமது காசிம் மற்றும் ஆசிரியர்கள்& மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.