தவறு செய்தலும் அதனை திருத்திக்கொள்வதும் மனிதனின் இயல்பு என்பதால் …மாதேஷ் மீண்டு (ம்)வருக! பத்திரிக்கையாளர் நாளையதீர்ப்பு செல்லப்பாண்டியன் கருத்து

0 218
ஒருவர் தவறு செய்தால் அல்லது தவறு செய்ததாக செய்தி அறிந்தால் அடித்து துவைத்து காயப்போடுவது சமூக ஊடகத்தின் தலையாய பணியாக மாறிவிட்ட நிலையில்,  கடந்த ஒரு வாரமாக
திரு.மாதேஷ் அவர்களை எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு விமர்சனங்களால் அடித்து துவைத்து சிலர் தனிப்பட்ட வன்மத்தையும் , பலர் தங்களது அறம் சார்ந்த கோபத்தையும் காட்டிவந்த நிலையில்,இன்று வந்த அவரது வீடியோ பார்க்க நேரிட்டது..உண்மையில் நல்ல ஒரு மனிதர் இப்படி தடுமாறி வீழ்ந்துவிட்டாரே என்கின்ற கவலையே அளித்தது.

அவரது தன்னிலை விளக்கமும்
மன்னிப்புக்கோரி வெளியிட்ட வீடியோவும் ஏறக்குறைய இத்தனை நாள் அவரை விமர்சனம் செய்து வந்த பலருக்கும் அவர் மீது இரக்கத்தை ஏற்படுத்தி உள்ளது அவரும் மனிதர்தானே…
தவறு செய்தலும் அதனை திருத்திக்கொள்வதும் மனிதனின் இயல்பு என்பதால் …

களங்காமல் மீண்டும் களமிறங்குவதே சிறப்பு. இனி திரு.மாதேஷ்… சரியான பாதையில் மட்டுமே பயணிப்பார் என அவரது தன்னிலை விளக்கம் தெளிவுடுத்துகிறது எனவே மறப்போம் மன்னிப்போம். வரவேற்போம் இவ்வாறு பத்திரிக்கையாளர் செல்லப்பாண்டி கருத்து பதிவிட்டுள்ளார் தவறுவது யாருக்கும் இயல்புதான் என்றாலும்கூட ஊடகத்துறையில் தவறு கூடவே கூடாது என மனம் வருந்திய பிறகு மாதேஷ்சைவரவேற்ப்பது சிறப்பு

டி.வி.மணிகண்டன்

Leave A Reply

Your email address will not be published.