திருச்சியை திணறடித்த முப்பெரும் விழா மாநாட்டில் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு-
அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுக-வின் ஆணிவேர் தொண்டர்கள் தான்;
நிரந்தர பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தை ரத்து செய்த நயவஞ்சகர்களை நாம் ஓட ஓட விரட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சகோதர பாசத்துடன் அதிமுகவை வளர்த்தனர். 2 முறை முதல்-அமைச்சர் பதவியை எனக்கு அம்மா கொடுத்தார். 3-வது முறையாக சின்னம்மா கொடுத்தார். தொண்டர்களில் ஒருவனை முதலமைச்சர் ஆக்கும் கடமை எனக்கு உள்ளது.
ஜெயலலிதா எனக்கு தந்த பதவியை நான் திருப்பி தந்து விட்டேன். இபிஎஸ்க்கு யார் பதவியை தந்தது? அதிமுக பொதுக்குழுவில் நிகழ்ச்சி நிரல்படி எதுவும் நடக்கவில்லை. அதிமுக தொண்டர்களை நம்பிதான் நாங்கள் தர்ம யுத்தத்தை தொடங்கி உள்ளோம். ஜனநாயகமுறையில் அதிமுக தொடர்ந்து இயங்க வேண்டும். தொண்டர்களுக்காக எந்த தியாகமும் செய்ய தயார். போலி பொதுக்குழு நடத்தி தண்ணீர் பாட்டில் வீசியவர்களுக்கு தக்கப்பாடம் புக