இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

0 139

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள், படகுகளை விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண கூட்டு நடவடிக்கை குழுவினை புதுப்பித்திட வேண்டும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 77 மீனவர்கள் மற்றும் 151 படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான அனைத்து தூதரக முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்- பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

Leave A Reply

Your email address will not be published.