கானாட்டாங்குடிஅரசு பள்ளியில்ஆண்டுவிழா
ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் கானட்டாங்குடி அரசு தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் யூனியன் காணட்டாங்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது
காலை 9 மணிக்கு தொடங்கிய ஆண்டு விழா நிகழ்ச்சியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற கவிதை போட்டி கதை சொல்லுதல் ஓட்டப்பந்தயம் இப்படி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது இந்தப் போட்டிகளில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது பள்ளி ஆண்டு விழா பிரம்மாண்ட விழாவாக ஏற்பாடுகள் செய்திருந்தனர் ஆசிரியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பள்ளி மாணவர்களின் நடனம் பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்றது விழாவை ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியர் ச. சரவணன் மற்றும் முருகாம்பிகை உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்களை அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி மாணவர்களுக்கு கொட்டகுடி ஊராட்சி மன்ற தலைவி உமா மகேஸ்வரி பழனிநாதன் ,
உள்ளூர் பிரமுகர்கள் செல்வராஜ் ஜெயராமன் ராயல் மோட்டார்ஸ் ரஜினி இளங்கோவன் எஸ் எம் சி ஐஸ்வர்யா பிரபு புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற துணைத் தலைவி மகாலட்சுமி மகாலிங்கம்ஆகியோர் பரிசுகளை வழங்கினர் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் காளைராஜன் கூட்டுறவு சங்க தலைவர்கள் மருதவயல் மதிவாணன் கருப்பூர் சண்முகம் மேல்பனையூர் அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீனம்பர் கருப்பூர் பள்ளி ஆசிரியர் சேதுராமன் அஞ்சுகோட்டை பள்ளி ஆசிரியர் கடுக்கலூர் பள்ளி ஆசிரியர் ஜெயசீலன் மதுரைதமிழன் வானொலி நிர்வாகி பட்டிமன்ற நடுவர் டி.வி.மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
விவேகானந்தன்
பெரியநாயகம்
முன்னாள் ராணுவ வீரர்கள் ராமநாதன் திருமேனி , சூர்யாசெல்லத்துரை இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் சரண்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டினர்.
ஜெயந்தன்வாசு