உலக நீர் நாள் கொண்டாட்டம்
பழனியில்நடந்தது
:
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டாரத்திற்கு உட்பட்ட நகராட்சி கடை வீதி நடுநிலைப்பள்ளியில், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் ஸ்வாதி.D, சுவேதா.M, தருணிகா S. P., வைஷ்ணவி K.R., வானதி. N, வந்தனா . S, வர்ஷினி. M, விதுபாலா. M, பாத்திமா. M ஆகியோர் ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பழனி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் பாலக் குமாரின் வழிகாட்டுதலின்படி ,
தோட்டக்கலை உதவி அலுவலர் கெளசல்யா மற்றும் பொறுப்பு தலைமையாசிரியர் கோகிலா வாணி தலைமையில் உலக நீர் நாள், பள்ளி மாணவர்களுடன் கொண்டாடப்பட்டது.
2024 உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் ‘அமைதிக்கான நீர்’. தண்ணீர் என்பது பயன்படுத்தப்படுவதற்கும், போட்டியிடுவதற்குமான ஒரு வளம் மட்டுமல்ல – அது மனித உரிமை, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உள்ளார்ந்ததாகும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.இந்த உலக தண்ணீர் தினத்தில், நாம் அனைவரும் தண்ணீரைச் சுற்றி ஒன்றுபட்டு, அமைதிக்காக தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும், மேலும் நிலையான மற்றும் வளமான நாளைக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்று
தோட்டக்கலை மாணவிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி சென்றனர். மேலும் பேச்சு போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. டிவி.மணிகண்டன்