பிரதமர் மோடியின் தூதுவனாக நான் போட்டியிடுகிறேன்-அறந்தாங்கியில்ஓபிஎஸ் பேச்சு.

0 1,754

இராமநாதபுரம் பாராளுமன்றத்தொகுதியில் பாரதப்பிரதமர் மோடியின் தூதுவனாக நான் போட்டியிடுகிறேன்..!
அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று அறந்தாங்கியில் நடந்தது
இந்தக்கூட்டத்தில் இராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர், தரனிமுருகேசன்,மாநிலங்களவை உறுப்பினர் தர்மர்,முன்னாள் எம்.எல்.ஏ.ரத்னசபாபதி, பாஜகமாநில தொழிற்பிரிவுதலைவர், குட்லக் ராஜேந்திரன், மாநிலபொதுக்குழு,
கடுக்கலூர் ஜெயப்பாண்டி, ரமணன்,சம்பத் மற்றும் அறந்தாங்கி சட்டமன்றத்தொகுதி
பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய,முன்னாள் தமிழக முதல்வரும் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியின் பாஜக ஆதரவுபெற்ற வேட்பாளருமான,திரு ஓ.பன்னீர்ச்செல்வம் அவர்கள்,பாரதப்பிரதமர் திரு மோடிஅவர்கள்தான் இராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்த்த நிலையில்,எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
நான் மோடியின் தூதுவனாக,ஏவலனாக இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் எப்போதும் மோடியின்
அருகிலேயே இருப்பேன்,
சின்னத்தை பட்டிதொட்டி எங்கும் கொண்டுச் செல்லவேண்டிய கடமை பாஜக தொண்டர்களுக்கு இருக்கிறது, இரட்டை இலையை அழிக்க போவதாக பிரச்சாரம் செயகிறார்கள் நான் இரட்டைஇலையை மீட்கவே போராடுகிறேன்.இவ்வாறு அவர்பேசினார்

டி.டி.வி.மணிகண்டன்

Leave A Reply

Your email address will not be published.