இந்தியாவின் உண்மையான மக்கள்தொகை என்ன என்று அதன் அரசாங்கத்திற்கே தெரியாது
இன்னும் இரண்டே மாதங்களில் உலகின் ஆக அதிக மக்கள்தொகை கொண்டுள்ள நாடாக இந்தியா இடம்பிடிக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. அதன் மக்கள்தொகை 1.4 பில்லியனை எட்டும் என முன்னதாக கணக்கிடப்பட்டது. ஆனால் அடுத்த ஓராண்டுக்காவது நாட்டின் உண்மையான நிலவரம் என்ன என்பது இந்திய அரசாங்கத்திற்கே தெரியாது எனக் கூறப்படுகிறது. மக்கள்தொகையை கணக்கிட முடியாததே அதற்கு காரணம்…
இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட இருந்தது. கிருமிப் பரவல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. தொழில்நுட்பம், தளவாடங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தடைகள் பற்றிய கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படுவதற்கான அறிகுறிகள் இல்லை…
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மதிப்பிட்டதால், தற்போதுள்ள உண்மை நிலவரத்தை கண்டறிவது சாத்தியமல்ல என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்…
2011ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள்தொகை 1.21 பில்லியனாக இருந்தது. 12 ஆண்டுகளில் அதன் மக்கள்தொகை 210 மில்லியனாக அதிகரித்துள்ளது…
இந்தியாவின் மக்கள்தொகை வரும் ஏப்ரல் 14ஆம் தேதியன்று 1,425,775,850யை எட்டும் என ஐக்கிய நாட்டு நிறுவனம் முன்னுரைத்துள்ளது….