ராஞ்சியில்தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு

0 211

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவிவசாயிகளின் போராளி தலைவர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைமையில் கன்னியாகுமரி முதல் டெல்லி நோக்கி செல்லும் பயண குழு11ஆம் தேதி அதிகாலை ராஞ்சி வந்தடைந்தது. திடீர் பயணமாக ராஞ்சி சென்றதால் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து உடனடியாக அழைப்பு விடுத்தனர். அதனை ஏற்று முதலமைச்சர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டு சிறப்பான வரவேற்பளித்தனர்.சனி ஞாயிறு இரு நாட்கள் வார
விடுமுறை என்பதாலும், திங்கட்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதாலும் முதலமைச்சர் ஹேமந்த்சோரன் சொந்த கிராமத்திற்கு ஹோலி பண்டிகை குலதெய்வ கோவில் பூஜை போட சென்றிருப்பதாகவும்,முதலமைச்சர் சார்பில் அவரது தனி செயலாளர் ஆதரவு கேட்கும் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.தேவை படின் அம்மாநில வேளாண்துறை அமைச்சர் பாட்னா
அருகே சொந்த கிராமத்தில் உள்ளதாகவும்,
அவர் உங்களை
சந்தித்து கோரிக்கை கடிதத்தை பெற்றுக்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.அதனை தொடர்ந்து எங்கள் பயணத்திற்கு முதலமைச்சர் ஹேமந்த்சோரன் முழு ஆதரவு தெரிவிப்பதாகவும், தொடர்ந்து தங்கள் கோரிக்கை குறித்து மத்திய அரசு வலியுறுத்த உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்ததாக தெரிவித்தனர்.
ராஞ்சியில் இருந்து வி.கே.வி.துரைசாமி

தங்கள்
வி.கே.வி.துரைசாமி..
பொதுச்செயலாளர்

80%
Awesome
  • Design
Leave A Reply

Your email address will not be published.