“சிறை தண்டனை, தகுதி நீக்கத்தை பார்த்து ஒருபோதும் நான் பயப்பட மாட்டேன்” ராகுல்காந்தி

0 72

“சிறை தண்டனை, தகுதி நீக்கத்தை பார்த்து ஒருபோதும் நான் பயப்பட மாட்டேன்”

இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது

அதானிக்காக பல்வேறு சட்டங்கள் வளைக்கப்பட்டுள்ளன. மோடி, அதானி இடையிலான தொடர்பு குறித்து பார்லி.,யில் கேள்வி எழுப்பினேன். என்னை பேச விடாமல் தடுத்தனர். 20 ஆயிரம் கோடி முறைகேடு தொடர்பாக, அதானிக்கு எங்கிருந்து பணம் வந்தது. யார் பணம் ? பல போலி நிறுவனங்கள் மூலம் குழும முறைகேடுகள் நடந்துள்ளன. சீன நபருக்கும் இதில் தொடர்பு உள்ளது. அதானி குறித்து பேசியது முதல் பிரச்சனை துவங்குகியது.

சபாநாயகருக்கு நான் அனுப்பியுள்ள கடிதத்திற்கு இதுவரை பதில் இல்லை. எனது தொகுதியான வயநாடு மக்களுக்கு நான் கடிதம் எழுத உள்ளேன். என்மீது இந்த தேச மக்கள் அன்பும் , மதிப்பும் வைத்துள்ளனர். அவர்களிடம் நியாயம் கேட்பேன். பிரதமர் மோடியை பார்த்து பயப்பட மாட்டேன். சிறை செல்ல அஞ்ச மாட்டேன். பதவியை பறித்து விட்டதால் நான் அமைதியாக இருக்க முடியாது. எதிர்கட்சிகள் எனக்கு அளித்துள்ள ஆதரவுக்கு நன்றி. தேர்தலில் போட்டியிட அனுமதிக்க விட்டாலும் தொடர்ந்து பணியாற்றுவேன்.

மேலும் அதானி குறித்து பேசுவதை தடுக்க பார்க்கின்றனர். எனது பதவி பறிக்கப்பட்டுள்ளது, நான் இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை. தேசத்திற்கு எதிரான சக்திகளை போராடி முறியடிப்பேன். இந்தியாவை இழிவுப்படுத்தவில்லை. அதானி குறித்து பேசியபோது பிரதமர் கண்களில் அச்சப்படுவதை பார்த்தேன். அடுத்தும் என்ன பேச போகிறேனோ என்று அஞ்சுகின்றனர்.
எதிர்கட்சிகள் அளித்துள்ள ஆதரவுக்கு நன்றி

Leave A Reply

Your email address will not be published.