” -“தயிர் (Curd) என்பதற்கு பதிலாக “தஹி” என இந்தியில் அச்சிட கட்டாயப்படுத்தும் FSSAI.”க்கு பால் முகவர்கள் சங்கம் கடும்கண்டனம்.

0 71

மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையமான FSSAI மாநில அரசுகளின் கூட்டுறவு பால் நிறுவனங்கள் தயாரித்து சந்தைப்படுத்தும் “தயிர்” பாக்கெட்டுகளில் “CURD” என பிரதானமாக ஆங்கிலத்தில் அச்சிடாமல் “தஹி” (DAHI) என இந்தி மொழியில் அச்சிட வேண்டும் எனவும், வேண்டுமானால் மாநில மொழிகளை அடைப்புக்குறிக்குள் போட்டுக் கொள்ளுமாறும் தெரிவித்து இந்தி பேசாத மாநிலங்களில் அரசு அமைப்புகள் மூலம் இந்தியை வலுக்கட்டாயமாக திணிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் மத்திய அரசுடைய FSSAI அதிகாரிகளின் இந்தி மற்றும் மோடியின் பாசத்தை தமிழக அரசு ஆரம்பத்திலேயே கடுமையாக எதிர்த்து குரல் கொடுப்பதோடு, தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் “தயிர்” பாக்கெட்டுகளில் “தஹி” என இந்தி மொழியில் அச்சிட முடியாது என்பதையும் தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் எந்த உணவை சாப்பிட வேண்டும், எந்த மொழியை பேச வேண்டும் என்பது அவரவர் முடிவு செய்ய வேண்டிய தனிமனித சுதந்திரம் தொடர்புடையதாகும் எனும் போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் இந்தி என்கிற ஒற்றை மொழியின் ஆதிக்கத்தின் கீழ் பாஜகவின் மோடி அரசு கொண்டு வர நினைப்பது அடக்குமுறை மட்டுமல்ல சர்வாதிகாரமும் கூட என்பதையும், சர்வாதிகாரத்தால் மக்களை அடக்கியாள நினைத்த சர்வாதிகாரிகள் எல்லாம் மக்களின் எழுச்சி முன் இருந்த சுவடே இல்லாமல் காணாமல் போனதையும் மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசு உணர வேண்டும்.

எனவே இந்தி பேசாத மாநிலங்களில் எப்படியெல்லாம் இந்தியை திணிப்பது..? என திட்டமிட்டு செயல்பட்டு வரும் “மோடி & கோ” தங்களை திருத்திக் கொண்டு மாநில அரசுகளுக்கு தேவையின்றி கொடுக்கின்ற அழுத்தங்களை கைவிட வேண்டும் அல்லது வருகின்ற 2024ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியதிருக்கும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் எச்சரிக்கிறது.

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
அலைபேசி :- 9600131725
கட்செவி அஞ்சல் (WhatsApp) 9566121277
29.03.2023 / காலை 8.40மணி.

“மக்கள் எதை சாப்பிட வேண்டும்..? என்ன மொழி பேச வேண்டும்..? என்பதை தீர்மானிக்க நீங்கள் யார்..?”
-“தயிர் (Curd) என்பதற்கு பதிலாக “தஹி” என இந்தியில் அச்சிட கட்டாயப்படுத்தும் FSSAI.”க்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்.

மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையமான FSSAI மாநில அரசுகளின் கூட்டுறவு பால் நிறுவனங்கள் தயாரித்து சந்தைப்படுத்தும் “தயிர்” பாக்கெட்டுகளில் “CURD” என பிரதானமாக ஆங்கிலத்தில் அச்சிடாமல் “தஹி” (DAHI) என இந்தி மொழியில் அச்சிட வேண்டும் எனவும், வேண்டுமானால் மாநில மொழிகளை அடைப்புக்குறிக்குள் போட்டுக் கொள்ளுமாறும் தெரிவித்து இந்தி பேசாத மாநிலங்களில் அரசு அமைப்புகள் மூலம் இந்தியை வலுக்கட்டாயமாக திணிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் மத்திய அரசுடைய FSSAI அதிகாரிகளின் இந்தி மற்றும் மோடியின் பாசத்தை தமிழக அரசு ஆரம்பத்திலேயே கடுமையாக எதிர்த்து குரல் கொடுப்பதோடு, தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் “தயிர்” பாக்கெட்டுகளில் “தஹி” என இந்தி மொழியில் அச்சிட முடியாது என்பதையும் தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் எந்த உணவை சாப்பிட வேண்டும், எந்த மொழியை பேச வேண்டும் என்பது அவரவர் முடிவு செய்ய வேண்டிய தனிமனித சுதந்திரம் தொடர்புடையதாகும் எனும் போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் இந்தி என்கிற ஒற்றை மொழியின் ஆதிக்கத்தின் கீழ் பாஜகவின் மோடி அரசு கொண்டு வர நினைப்பது அடக்குமுறை மட்டுமல்ல சர்வாதிகாரமும் கூட என்பதையும், சர்வாதிகாரத்தால் மக்களை அடக்கியாள நினைத்த சர்வாதிகாரிகள் எல்லாம் மக்களின் எழுச்சி முன் இருந்த சுவடே இல்லாமல் காணாமல் போனதையும் மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசு உணர வேண்டும்.

எனவே இந்தி பேசாத மாநிலங்களில் எப்படியெல்லாம் இந்தியை திணிப்பது..? என திட்டமிட்டு செயல்பட்டு வரும் “மோடி & கோ” தங்களை திருத்திக் கொண்டு மாநில அரசுகளுக்கு தேவையின்றி கொடுக்கின்ற அழுத்தங்களை கைவிட வேண்டும் அல்லது வருகின்ற 2024ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியதிருக்கும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் எச்சரிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.