மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் திருவாரூர் புத்தக திருவிழா பிஆர்.பாண்டியன் வாழ்த்து

0 81

மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் திருவாரூர் புத்தக திருவிழா பிஆர்.பாண்டியன் வாழ்த்து

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர் பாண்டியன் திருவாரூரில் நடைபெற்று வரும் புத்தகத்திருவிழாவில் விவசாயிகளுடன் பங்கேற்றப்பின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

காவிரி டெல்டாவின் மையமாவட்டமான திருவாரூர் 90% விவசாயிகளை கொண்டது மட்டுமின்றி முற்றிலும் கிராமப்ப பகுதிகளை உள்ளடக்கியதாகும். ஏழை எளிய நடுத்தர பகுதி மக்கள் வாழும் மாவட்டமாகும். பின்தங்கிய மாவட்டத்தில் கிராமப்பகுதி மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது.

பாரம்பரிய வேளாண்மை, உணவு முறைகள் குறித்தான சிறந்த புத்தகங்கள் நிரம்ப இடம்பெற்றுள்ளது பாராட்டுக் குறியதாகும்.

தமிழகத்தின் வரலாறு,வாழ்வியல் உள்ளடக்கிய புகழ் மிகுந்த எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அவர்கள் தான் பொருப்பேற்ற குறுகிய காலத்தில் மிகசிறப்பாக ஏற்ப்பாடு செய்துள்ளார். அவருக்கு விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மாவட்ட சிறைத்துறை சார்பில் கைதிகளிடம் வாசிப்பு பழக்கம் மூலம் நற்பண்புகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கோடு புத்தக சேமிப்பு நிலையம் உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. ரூ 3000ம் மதிப்புள்ள புத்தகங்களை விவசாயிகள் சார்பில் சிறை கைதிகளுக்காக சிறைத்துறையிடம் வழங்கி உள்ளோம்.

திருவாரூர் மாவட்ட தலைவர் எம்.சுப்பையன், மாபட்ட துணை தலைவர் எம்.கோவிந்தராஜ், கோட்டூர் ஒன்றிய செயலாளர் எம்.தெய்வமணி உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கச்சனம் தவமணி, அசேஷம் குணசேகரன், அறிவு உட்பட முன்னனி நிர்வாகிகள் பங்கேற்றனர். நூலகர் ஆசைத்தம்பி விழா குறித்த சிறப்புகளை விளக்கின

Leave A Reply

Your email address will not be published.