செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் சிறப்பு செய்தியாளர் கோகுல் ரமணன் ஒளிப்பதிவாளர் பரத் குமார் மீது தாக்குதல் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு வலியுறுத்தல்.
இன்று 24-04-2023 திங்கட்கிழமை காலை முதல் சென்னையில் ஜி ஸ்கொயர் (G Squre) என்ற தனியார் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் அது தொடர்பாக செய்தி சேகரிக்கும் பணியில் ஊடகவியலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சிறப்பு செய்தியாளர் கோகுல் ரமணன் ஒளிப்பதிவாளர் பரத் குமார் இருவரும் சென்னை சேத்துப்பட்டு , ஹாரிங்டன் சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் நடைபெறும் சோதனையை செய்தி சேகரிப்பதற்காக சென்றபோது ,
அங்கு வந்த நபர் ஒருவர், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் செயலாளர் என கூறிக்கொண்டு நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மூத்த சிறப்பு செய்தியாளர் கோகுல் ரமணன் ஒளிப்பதிவாளர் பரத் குமார் இருவரையும் செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததுடன் ஒளிப்பதிவாளரை கீழே தள்ளியும் கேமராவையும் தள்ளி சேதப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
ஊடகங்களின் குரல் வலையை நசுக்கும் போக்காகவே இந்த சம்பவத்தை கருதுகிறோம்.மேலும் அந்த குறிப்பிட்ட நபர் ஊடகவியலாளர்களை ஆபாசமாக அருவருப்பான முறையில் திட்டியதுடன் மிரட்டியிருக்கிறார்.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சிறப்பு செய்தியாளர் கோகுல் ரமணன் ஒளிப்பதிவாளர் பரத் குமார் இருவரையும் செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததுடன் கேமிராவை சேதப்படுத்திய சமுகவிரோதி மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகராளிக்கப்பட்டுள்ளது.காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
தமிழக அரசே பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்று! பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்து!
பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்
24-04-2023