நிலக்கரி எடுக்க எதிர்ப்பு
அவசர செய்தி அறிக்கை
இடம்:மன்னார்குடி நாள்: 04.03.2023
மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் இன்று மாலை 3 மணிக்கு வடசேரி நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. விவசாயிகள் அனைவரும் பங்கேற்று ஆதரவு அளிக்க அன்புடன் வேண்டுகிறேன். நிலக்கரி எடுக்கும் திட்டம் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணையை இத்துடன் இணைத்து அனுப்பி உள்ளேன். விவசாயிகள் அவசரம் கருதி பங்கேற்க வேண்டும். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பேரழிவை சந்திக்கும்.மக்கள் அகதிகளாக வெளியேற்றும் பேராபத்து ஏற்படும்.நம் மண்ணைக் காக்க நாம் போராட்ட களத்தில் சங்கமிப்போம். அமைதி வழி போராட்டமாக மத்திய அரசை கண்டித்து,கைவிட வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது. ஒன்றிணைவோம் வெற்றி பெறுவோம் வாரீர்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு