ராகுல்காந்திக்கு கமல் வாழ்த்து
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலகாந்திக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் டிவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,
காந்திஜியைப் போலவே, மக்களின் இதயங்களில் நீங்கள் நுழைந்துள்ளீர்கள்.
அவரை போலவே மென்மையான வழியில் உலகின் சக்திகளை அசைக்க முடியும் என்று நிரூபித்துவிட்டீர்கள்.
கர்நாடக மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்துள்ளனர்.
வெற்றிக்கு மட்டுமல்ல, வெற்றியின் விதத்திற்கும் எனது பாராட்டுக்கள்!
என தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.