தமிழ்நாடு அனைத்துவிவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு மாநிலபொதுக்குழு கூட்டம்

0 72

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில பொதுக்குழு கூட்டம் இன்று மாலை 3 மணி அளவில் குற்றாலத்தில் துவங்கியது.

பொதுச் செயலாளர் வி கே வி துரைச்சாமி தலைமையற்றார். தலைவர்
பி ஆர் பாண்டியன் விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் மத்திய மாநில அரசுகளின் விவசாய விரோத கொள்கைகள் குறித்து எடுத்துரைத்தார். கூட்டத்தில்எஸ் கே எம் உறுப்பினர்கள் பஞ்சாப் ராஜ்வீந்தர் சிங் கோல்டன் ஹரியானா சுவாமி இந்தர்,மாநில கவுரவத் தலைவர் எம் பி ராமன்’முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் வழக்கறிஞர் எம் கே எம் முத்துராமலிங்கம்,
மாநிலத் துணைத் தலைவர் விஎம். ஃபாரூக், அமைப்பு செயலாளர் எஸ் ஸ்ரீதர்.தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க தலைவர் தஞ்சை எல். பழனியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர்.

நெல்லை மண்டல தலைவர் எஸ் செல்லத்துரை வரவேற்றார். நிகழ்ச்சியில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்று உள்ளனர்.

இன்றைய முதல் தீர்மானமாக திருநெல்வேலி தூத்துக்குடி நெல்லை தென்காசி மாவட்டங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட இடங்களில் கேரளாவை சார்ந்த கனிமவள கொள்ளையர்கள்
கள்குவாரிகள் அமைத்து கனிமவள கடத்தலில் நாள் ஒன்றுக்கு 3000க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. இதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி நாளை 15.05.2023 அன்று பிற்பகல் 2 மணி அளவில் தென்காசி மாவட்டம் புளியரை காவல்துறை சோதனை சாவடி முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்று தமிழகத்தை பாதுகாக்க முதல் கட்ட எச்சரிக்கை ஆர்ப்பாட்டமாக நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.