வத்தலகுண்டு தொழிலாளர்களிடையே சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் சைபர் கிரைம் உதவி எண் 1930 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்.

0 156

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .V. பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் .மீனா மற்றும் காவலர்கள் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஸ்ரீ சரவணா டெக்ஸ்டைல்ஸ் மில்லில் இன்று தொழிலாளர்களிடையே சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், ஆன்லைனில் உள்ள போலியான கடன் செயலிகளை (Loan App) நம்பி கடன் பெற வேண்டாம் எனவும், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி OTP கேட்டால் யாரிடமும் உங்களது OTP யை தெரிவிக்க வேண்டாம் எனவும், சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் பெண்கள் மிகவும் கவனமாக இருக்கும் படியும், மேலும் இணைய வழி குற்றங்கள் குறித்து புகார் செய்ய 1930 என்ற எண்னை அழைக்கும் படியும், இணையதளம் வாயிலாக புகார் செய்ய www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தும் படியும் அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.