அதிக மரணங்களுக்கு காரணம் தடுப்பூசியா? மக்கள்மருத்துவர் வீ.புகழேந்தி
கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்திருக்கும் மரணங்களுக்குக் காரணம் கொரோனா தடுப்பூசியா?-
தமிழகத்தில் பொதுசுகாதாரத்துறை இயக்குநரகம்,கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் நிகழ்ந்த இறப்புகளை கணக்கிட்டு அது 8% உயர்ந்துள்ளது என்ற புள்ளிவிபரத்தை Tamilnadu Journal of Public Health and Medical Research பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக தான் இது நடந்ததா?எனும் விரிவான ஆய்வை அது மேற்கொள்ளவில்லை. இந்த புள்ளிவிபரத்தை கணக்கில் கொண்டு,அது கொரோனா பாதிப்பில்லாமல் நடந்திருக்குமா?எனும் விரிவான ஆய்வை மற்ற அறிவியல் நிறுவனங்கள்/ஆய்வாளர்கள் மேற்கொண்டு,மேலும் பல அறிவியல் செய்திகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் எனும் கருத்தையும்,அது வெளியிட்டுள்ளது.
கன்னியாகுமரி ஆய்வு முடிவுகள் போல் வேறு மக்களிடத்தும் முடிவுகள் உள்ளனவா? எனும் ஆய்வுகளும் முக்கியமானது என்ற செய்தியையும் அது வெளியிட்டுள்ளது.
புள்ளிவிபரம்-
கன்னியாகுமரி-
ஏப்ரல்-செப்டம்பர் இடைப்பட்ட காலத்தில் கொரோனாவுக்கு முன்னும்,பின்னும் நிகழ்ந்த இறப்பு விகிதம் ஒப்பிடப்பட்டுள்ளது.
2019 -ஆயிரம் பேரில் 3.97 பேர்
2022 – ஆயிரம் பேரில் 4.28 பேர்
ஆண்கள்-
2019-4.52 பேர்
2022- 4.78 பேர்
பெண்கள்-
2019- 3.4 பேர்
2022 – 3.78 பேர்
18 வயது கீழ்பட்டவர்கள்,19-30 வயதினர்,31-45 வயதினர் மத்தியில் இறப்பு வகிதம் சற்று குறைந்துள்ளது.
0-18 வயது-
2019-0.23பேர்
2022-0.21 பேர்
19-30 வயது-
2019-0.49 பேர்
2022- 0.44 பேர்
31-45 பேர்-
2019- 1.19பேர்
2022- 1.08 பேர்
ஆனால்,
46-60 வயதிலும்,60 வயதிற்கு மேலும் இறப்புகள் அதிகமாகியுள்ளன.
46-60 வயது-
2019-4.31 பேர்
2022-4.42 பேர்
60+ வயது-
2019-26.1 பேர்
2022 -29.27 பேர்
(மேற்கூறப்பட்டவை அனைத்தும் 1,000 பேருக்கு).
மேற்கூறப்பட்ட புள்ளிவிபரங்கள்,ஆய்வுகளின்படி,6 மாத கால இடைவெளியில்,2019,2022 ல் இறப்புகளை ஒப்பிடும் போது ஆண்கள் மத்தியில் 7% உயர்ந்தும்,பெண்கள் மத்தியில் 11% உயர்ந்தும் காணப்படுகிறது.
ஆய்வை மேற்கொண்ட பொதுசுகாதாரத்துறை ஆய்வாளர்கள் மீனாட்சி மறறும் கோல்டன் சீபா இருவரும்,இறப்பு விகிதம் கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் உயர்ந்ததால்,கொரோனா தாக்கம் அதற்கு காரணமாக இருக்குமா?என விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதிலுள்ள முக்கிய புள்ளிவிபரங்களை (1)சிறார்கள் மத்தியில் இறப்பு குறைந்துள்ளது.
2)ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களிடத்து இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
3)46-60 வயது,60+ வயதில் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.)
இவற்றை பார்க்கும் போது கொரோனா தடுப்பூசி ஏன் அதிகரித்த இறப்புகளுக்கு காரணமாக இருக்கக்கூடாது எனும் கேள்வி எழுகிறது.
காரணங்கள்-
1)0-18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசிகள் பின்னரும், ஒப்பீட்டளவில் குறைவாகவும் செலுத்தப்பட்டுள்ளது.
2)தடுப்பூசிகளால் நிகழும் பின்விளைவுகள்,ஆட்டோ இம்யூன் நோய்கள் பெண்களை தான் அதிகம் பாதிக்கும்.
3)தடுப்பூசி செலுத்த ஆரம்பிக்கும் போது 45+,60+ வயதினருக்கே முதலிலும்,முன்னுரிமையும் கொடுத்து செலுத்தப்பட்டுள்ளது.(60+ வயதினருக்கு இறப்பு விகிதம் 12%, 6 மாத கால இடைவெளியில் ஒப்பிடும்போது மிக அதிகமாக உயர்ந்துள்ளது.)
4)2022ல் வந்த அறிக்கையில் குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டங்களில் கன்னியாகுமரி இல்லை.
5)கன்னியாகுமரி மாவட்டத்தில்,ஒரு அறிக்கையில் கொரோனா தடுப்பூசி பின்விளைவுகள் 0.001% பேருக்கு(27 பேருக்கு)ஏற்பட்டதாக புள்ளிவிபரம் உள்ளது.
கொரோனா நீண்ட கால பின்விளைவு(Long Covid)காரணமாகவும்,கொரோனா தடுப்பூசி காரணமாகவும் இருதய தசை அழற்சி(Myocarditis)ஏற்பட்டு மரணம் நிகழும் என்பதாலும்(இருதய நோய் உள்ளவர்களிடம் இறப்பு 10% உயர்ந்துள்ளது!),பிரேத பரிசோதனை மூலம் இருதய இறப்பிற்கு தடுப்பூசியா அல்லது நீண்ட கால கொரோனா பாதிப்பா?என வேறுபடுத்த முடியும் என்பதால்,அத்தகைய ஆய்வுகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்வது உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.
மேலும்,
அதிகம் தடுப்பூசி செலுத்தப்பட்ட சென்னையில் ஆய்வு மேற்கொண்டால் இறப்பு குறித்து கூடுதல் தகவல்கள் தெரிய வரும் என்பதால்,தமிழக பொதுசுகாதாரத்துறை,அதை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும்.