கலைஞர் பிறந்தநாள் பரிசாக பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுமா!
அரசு பள்ளிகளில் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆண்டுக்கும் மேல் தற்காலிகப் பணியில் ₹10ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிகிறார்கள்.
2016 சட்டமன்ற தேர்தலில் கலைஞர் திமுக தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தரம் கோரிக்கை இடம்பெற செய்தார்.
அந்த சட்டமன்ற தேர்தலில் எதிர்கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பலமுறை பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய குரல் கொடுத்தது.
கலைஞர் வழியில் திமுக தலைவர் ஸ்டாலின், 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கோரிக்கை இடம்பெற செய்தார்.
திமுக ஆட்சிக்கு வந்ததால் பகுதிநேர ஆசிரியர்கள் இதனை ஒவ்வொரு பட்ஜெட்டிலும் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஆனால் 3 பட்ஜெட்டிலும் நிறைவேற்றவில்லை.
ஜூன்-3 தேதி கலைஞர் பிறந்தநாள் பரிசு அறிவிப்பாக பணிநிரந்தரம் அறிவிக்கப்படுமா என ஆவலோடு எதிர்பார்த்து வருகிறார்கள்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் அரசு ஊழியர் ஆசிரியர்களின் கோரிக்கைகளை போலவே, பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் முக்கிய கோரிக்கையாகவே இருந்து வருவதால் ஒருவித எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியது:
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலைஞர் பிறந்தநாள் பரிசாக பணிநிரந்தரம் செய்வார் என 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறோம்.
ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கும் முன்பாக தமிழக முதல்வர் அவர்கள் நல்லதொரு வாழ்க்கை கொடுப்பார் எனவும் பெரிய நம்பிக்கையோடு உள்ளோம் என்றார்.
எஸ்.செந்தில்குமார்
செல் : 9487257203
மாநில ஒருங்கிணைப்பாளர்,பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு