மேகதாதுவில் அணை கட்டுவேன் தமிழ் நாட்டிற்கு தண்ணீர் விட மாட்டேன் கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவக்குமாரின் கருத்துக்கு தமிழ்நாடு அரசு மெளனம் காப்பது ஏன் ?

0 67

பிஆர் பாண்டியன் கேள்வி.

மேகதாதுவில் அணை கட்டுவேன் தமிழ் நாட்டிற்கு தண்ணீர் விட மாட்டேன் கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவக்குமாரின் கருத்துக்கு தமிழ்நாடு அரசு மெளனம் காப்பது ஏன்?ஜூன் மாத ஒதுக்கிடான 9.1 டிஎம்சி தண்ணீரை உடன் விடுவிக்க ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடகம் தர மறுப்பதை தட்டிக் கேட்க தமிழ்நாடு முதலமைச்சர் தயங்குவது ஏன்?தமிழ்நாடு அரசு முடங்கி விட்டதா?

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பி ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

கர்நாடகாவில் புதிய ஆட்சி பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து மேகதாட்டு அணை கட்டுவேன் என சட்டவிரோதமாக அம் மாநில துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் பேசி வருகிறார்.தமிழ்நாடு முதலமைச்சர் வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள டி கே சிவகுமார் காவிரியில் தமிழ்நாட்டிற்கு ஜூன் மாத ஒதுக்கிடான 9.1 டிஎம்சி தண்ணீரை ஆணையம் உத்தரவை ஏற்று திறக்க மாட்டோம் என வக்கிரமாகவும் பேசி உள்ளார். மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிப்பதை மத்திய அரசு ஏற்கக் கூடாது. உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் சட்டத்திற்கு புறம்பான கருத்துக்களை பொதுவெளியில் பேசுவதை கண்டிக்காமல் தமிழ்நாடு முதலமைச்சர் வாய் மூடி மௌனியாக இருப்பது ஏன்?

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா விவசாயிகள் முதலமைச்சரின் அறிவிப்பை ஏற்று சுமார் 5 லட்சம் ஏக்கரில் குருவை நேரடி விதைப்பை செய்திருக்கிறார்கள். பல்வேறு இடங்களில் நடவு பணிகள் தொடங்கியுள்ள நிலையில் தண்ணீர் இன்றி விவசாயிகள் பரிதவிக்கிறார்கள்.

தேங்காய் மற்றும் பருத்திக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகளபோராடி வருகிறார்கள். அது குறித்து எந்த நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளாமல் ஒட்டுமொத்த விவசாயிகளையும் புறக்கணிக்கும் நிலையை கடைபிடிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசு ஒட்டுமொத்தமாக ஒரு மாத காலமாக முடங்கிப் போய் உள்ளதோ என்ற அஞ்ச தோன்றுகிறது.

தென்பெண்ணை ஆற்றில் சட்ட விரோதமாக அணைக்கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தனி தீர்ப்பாயம் அமைத்து தீர்வு காண உத்தரவிட்ட நிலையில்,அதனை ஏற்க மாட்டோம் மத்திய அரசு துணை போகக்கூடாது என கர்நாடகா அரசு தெரிவித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு தன் நிலை குறித்து தெளிவுபடுத்தாமல் மௌனம் காத்து வருவது ஏற்கத்தக்கதல்ல


என்.மணிமாறன் செய்தி தொடர்பாளர்.

Leave A Reply

Your email address will not be published.