–
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட சின்னத் தொண்டி கிராமத்தில் பேரூராட்சிக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்ட இடத்தில் நில அளவை செய்து வேலி அமைப்பது, கடற்கரை எதிரே நல்ல தண்ணீர் ஊற்று உள்ள முடிச்சலான் தோப்பில் உள்ள கிணற்றிலிருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய அங்கு அமைந்துள்ள 4 கிணற்றைச் சுற்றிலும் கம்பி வேலி சுற்றி இரும்பு கதவு அமைத்து, பேரூராட்சிக்குச் சொந்தமான 5 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே உள்ள பம்ப் ரூமிற்கு மின் இணைப்பு மற்றும் மராமத்து பணி செய்வது, தொண்டியில் இரவு நேரங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் அதிக அளவு விபத்துக்கள் ஏற்படுவதாலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அவசர கால மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவனை கொண்டு செல்வதற்கும், இங்கு முறையான அவசர ஊர்தி இல்லாத காரணத்தால் பொதுமக்கள் நலன் கருதி அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய அவசர ஊர்தியான 108 வாகனம் அரசு வழங்கிட சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்வது, தெற்கு தோப்பு தெரு வள்ளுவர் நகர் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை அருகில் உள்ள சிறு பாலத்தை மராமத்து பணி மேற்கொள்வது சம்பந்தமாக, தர்ஹா வடக்கு தெருவில் சிறு பாலம் கட்டுதல், தர்ஹா கால்மாட்டுத்தெருவில் வாறுகால் மராமத்து பணி செய்வது மழை காலம் நெருங்கி வருவதால் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் புகை போக்கி இயந்திரம் வாங்குதல், உயர் மின் அழுத்தம் காரணமாக பழுதடைந்த மின் விளக்குகளுக்குப் பதிலாக புதிதாக 164 மின் விளக்குகள் பொருத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வார்டு கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர். செய்தி. தொண்டி ஜெயந்தா
Prev Post