சாதனை மாணவிக்கு குவியும் பாராட்டுக்கள்!

0 220


ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள முகமது காசீம் தெருவைச் சேர்ந்த அசாருதீன், அப்சான் நாச்சியா தம்பதியின் மகள் அதிஃபா. இவர் தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன்தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறார்

இப்பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவ,மாணவிகளின் திறமையைக்கண்டறிந்து மேடை ஏற்றி தனித்திறனை வெளிப்படுத்த இப்பள்ளி தலைமை ஆசிரியை நல்லாசிரியர் விருது பெற்ற சாந்தி முருகானந்தம் உறுதுணையாக இருந்து வருகிறார்.

அதிஃபா என்ற மாணவியை பெற்றோர் ஒத்துழைப்புடன் தனித்திறமையை வெளிப்படுத்த தயார் செய்துள்ளார். அதன்படி 2-ம் வகுப்பு மாணவி அதிஃபா ,தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்கள் பெயர்களை 19 நொடிப்பொழுதில் சொல்வதோடு, இந்திய மாநிலங்கள் 28 -ன் பெயரையும் 16 நொடிப்பொழுதிலும், தமிழ் எழுத்துக்கள் 247யும் 53 நொடிகளிலும் கடகடவென மனப்பாடமாக கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். இவரது செயலை கல்வி அதிகாரிகள், பள்ளியின் தலைமை ஆசிரியை பாராட்டியதோடு சக பள்ளி ஆசிரியைகளும், மாணவ மாணவிகளும் பாராட்டி வருகின்றனர். மேலும் ஜாக்கி புக் ஆஃப் வேல்டு ரெக்கார்டு புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.