காரங்காடுசூழல் சுற்றுலா .மீண்டும் தொடங்கியது…படகுசவ்வாரி
தொண்டி ஜெயந்தன் வாசு
தொண்டி, டிச.22-
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடலோர கிராமமானது காராங்காடு. பட்டுக்கோட்டையிலிருந்து இராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் மணக்குடி அருகே அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சிவகங்கை, திருவாடானை, தொண்டி வழியாகவும் வரலாம்.இங்கு இயற்கையாகவே கடலோரத்தில் அலையாத்தி காடுகள் எனப்படும் மாங்குரோவ் காடுகள் உள்ளது. நிலத்தில் வளர்வது போல கடலோரத்தில் பசுமையாக வளர்ந்திருப்பதால் இத்தகைய அழகை பொது மக்களும் ரசிக்கும் வகையில் தமிழக அரசு வனத்துறையுடன் இப்பகுதி மீனவ மக்களைக்கொண்டு சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலாவாக மாற்றியுள்ளது. 5 வயது முதல் 12 வயது வரை ரூ 100ம் அதற்கு மேல் வயதுடையவர்களுக்கு ரூ 200 ம் கட்டணமாக 1 வசூலித்து படகு சவாரி அழைத்துச் செல்கின்றனர். லைப் ஜாக்கெட் எனப்படும் பாதுகாப்பு கவசம் வழங்கி கடலில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் செல்கின்றனர் இதனால் கடலில் சென்று வரை 4 கிலோ மீட்டர் பயணம் செய்து கடல் ஓரத்தில் வளர்ந்துள்ள மாங்குரோவ் காடுகளின் அழகையும் அங்கு இனப்பெருக்கத்திற்காக வரும் வெளி நாட்டு பறவைகளையும் கண்டு ரசிக்கலாம். மேலும் சுடச்சுட கடல் உணவுவை ருசிக்கவும் செய்யலாம். அதற்கு ஒரு நாள் முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஏர்வாடி வனத்துறை ரேஞ்சர் கூடுதல் பொறுப்பில் உள்ளது. தற்போது பெய்த தொடர் மழைக்கு பிறகு தற்போது மீண்டும் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வர வாய்ப்பு உள்ளது இங்கு சுற்றுலாப்பயணிகள் கடல் அழகை ரசிக்க 2 படகுகளும், தனி நபர் துடுப்பு பயன்படுத்தி பயணிக்கும் ஹயாக்கிங் எனப்படும் படகுகள் 6ம் உள்ளது.