ராமநாதபுரம், ஜன.20-
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே லாஞ்சியடி பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆழ் கடல் மீன் பிடி தொழில் செய்து வரும் விசைப்படகு மீனவர்கள் பொங்கல் விடுமுறைக்கு பிறகு மீன் பிடி தொழிலுக்கு செல்லவில்லை. பாரத பிரதமர் இராமேஸ்வரம் வருகையால் பாதுகாப்பு காரணங்களுக்காக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்களின் மீன்பிடி தொழில் பாதிப்பு ஏற்பட்டது.