ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி அருகே உள்ள புதுப்பட்டிணத்தில் பஞ்சாயத்து தலைவர் முகமது முஸ்தபா தலைமையில் சமத்துவ மற்றும் சமய நல்லிணக்க பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாடானை யூனியன் சேர்மன் முகம்மது முக்தார், தி.முக. தெற்கு ஒன்றிய செயலாளர் இராஜராம், வேல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவன திட்ட மேலாளர் சந்திர எபினேசர், மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஓய்வு குணசேகரன் தி.மு.க மாவட்ட இலக்கிய அணி மணிமாறன் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி செயலர் இமானுவேல் அனைவரையும் வரவேற்றார். இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து சிறுவர்கள், இளைஞர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Prev Post