காவிரி நீரை உடனடியாக திறக்க வேண்டும். இல்லையேல் விவசாயிகள் மேட்டூர் அணை திறக்க நேரிடும்பி ஆர்.பாண்டியன் எச்சரிக்கை …
சாகுபடி துவங்க ஊக்க நிதியாக ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் முழு மானியத்தில் ஆண்டுதோறும் வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 யை கைவிட வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பெண்கள் பங்கேற்ற மாபெரும் முற்றுகை போராட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்
எஸ் கே எம் தமிழக தலைவர் பி.அய்யாக்கண்ணு மாநில கன்வீனர்
பி ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தில் தமிழக அரசை கண்டித்து சாலை மறியலில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
போராட்ட களத்திற்கு நேரில் வருகை தந்த மாவட்ட ஆட்சியர் விவசாயிகளிடம் கோரிக்கைகளை பெற்றுக் கொண்டார். போராட்டத்தின் நோக்கம் குறித்து
பிஆர்.பாண்டியன் எடுத்துரைத்தார். உரிய முறையில் அரசுக்கு எடுத்துரைப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம்ப பிஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு விவசாயிகளை சந்திக்க தமிழ்நாடு முதலமைச்சர் மறுக்கிறார். நில ஒருங்கிணைப்பு சட்டம் -2023 கொண்டு வந்துள்ளார்.கார்ப்பரேட்டுகளுக்கு நிலம் கொடுக்க விவசாயிகள் மறுத்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுமை அரங்கேறி வருகிறது. இச்சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மறுத்தால் பாராளுமன்ற தேர்தலில் திமுக அரசுக்கு எதிராக களம் இறங்குவோம் என எச்சரிக்கிறேன்.
விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட முருகேஷ் ஐஏஎஸ் இன்று வேளாண் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்,மறுத்தால் தீவிர போராட்டத்தில் களம் இறங்குவோம்.
நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ3500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ4000 வழங்க வேண்டும்.
பயிர் காப்பீடு திட்டத்தில் ஊழல் முறைகேடுகளை தடுத்து நிறுத்த மாவட்டங்கள் தோறும் தனி நிர்வாக அலுவலகம் ஏற்படுத்த வேண்டும். காப்பீட்டுக்கான இழப்பீடு 100 சதவீதம் பெற்றுத் தருவதை தமிழக அரசு பொருப்பேற்க வேண்டும்.
பேரழிவு பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெல் ஏக்கர் ஒன்றுக்கு 25000 ரூபாய் இருபொருள் இழப்பீடாக வழங்குவதோடு, கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்து பயிர்கள்,வாழை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும்.
தெலுங்கானா ஆந்திர மாநிலங்களை பின்பற்றி ஏக்கர் ஒன்றுக்கு சாகுபடி தூங்குவதற்கு முன் பத்தாயிரம் ரூபாய் ஊக்க நிதியாக முழு மானியத்தில் வழங்கிட வேண்டும் என்பன
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட மாநில முழுமையிலிருந்து விவசாயிகள் 1000 கணக்கானோர் பங்கேற்று மாநிலம் தழுவிய போராட்டமாக திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.
முன்னதாக வெஸ்லி பள்ளி அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஏற்காடு மலைப்பகுதி பெண் விவசாயிகள் கும்மியடித்து ஆடி பாடி வந்தனர்.
போராட்டத்திற்கு இணை ஒருங்கிணைப்பாளர் சென்னை வி கே வி துரைசாமி, தென் மண்டல பொறுப்பாளர்
எல் ஆதிமூலம் மாநிலத் துணைத் தலைவர் திருச்சி பாரூக்.தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தென்னிந்திய நதிகள் இணைப்பு மாநில செயலாளர் மனோகரன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் எல். பழனியப்பன் உள்ளிட்ட அனைத்து மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.