விபத்தில்சிக்கி மாயமானார் சைதை துரைச்சாமி மகன் வெற்றி

0 66

𝙼𝚊𝚗𝚒𝚔𝚊𝚗𝚍𝚊𝚗

சென்னை முன்னாள் மேயரான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேசம் சென்றுள்ளார். அவர்கள் சென்ற இன்னோவா கார்நேற்று மாலை சட்லெஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரை ஓட்டிய செந்தில் என்பவர் உயிரிழந்த நிலையில், கோபிநாத் படுகாயங்களுடன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆற்றில் விழுந்த வெற்றி துரைசாமி எங்கிருக்கிறார் என்று தெரியாததால் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை இமாச்சல பிரதேச போலீசார் தமிழ்நாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு குழு உதவி உடன் வெற்றிதுரைசாமியை தேடும் பணி நடந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.