தொண்டி மேற்கு தொடக்கப் பள்ளியின் 86 வது ஆண்டு விழா

0 57

தொண்டி, பிப்.10-
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியின் 86-ம் ஆண்டு, ஆண்டுவிழா ஜவஹர் அலிகான் மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் தலைமையில் நடைபெற்றது. தொண்டி முதல் நிலை பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு, திருவாடானை யூனியன் சேர்மன் முகம்மது முக்தார் உட்பட வார்டு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் வாசு. ஜெயந்தன்,பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா, வார்டு உறுப்பினர்கள், மஹ்ஜபின் சல்மா பீவி, சமீமா பானு, பெரியசாமி,ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா மற்றும் நிர்வாகிகள் வணிகர் நலச்சங்க தலைவர் அக்பர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை சுபஸ்ரீ அனைவரையும் வரவேற்றார்.

பள்ளி தலைமை ஆசிரியை நல்லாசிரியர் சாந்தி முருகானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார். மாணவ,மாணவிகளின் பரதம், கும்மிப்பாட்டு, கோலாட்டம், கல்வி விழிப்புணர்வு நாடகம், நடனம், தேச ஒற்றுமை பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற கல்வி,விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள்பெற்றோருக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியை அம்சத் ராணி நன்றி கூறினார்.

Jayanthan vasu

Leave A Reply

Your email address will not be published.