தொண்டியில் நூலகம் கட்ட பூமி பூஜை
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பொது நூலகத்துறை சார்பில் புதிய நூலகம் கட்டுவதற்காக மாவட்ட நூலக அலுவலர் இளங்கோ தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. திருவாடானை யூனியன் சேர்மன் முகம்மது முத்தார், தொண்டி பேரூராட்சி சேர்மன் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், தி.மு.க, தெற்கு ஒன்றிய செயலாளர் இராஜாராம், நகர் காங்கிரஸ் தலைவர் காத்த ராஜா, தி.மு.க. மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் விஜய கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கட்டிடம் சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது ஏற்கனவே இவ்விடத்தில் இருந்த நூலகம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் கட்டப்படுகிறது.இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கம் அதிகமாகும்.