தொண்டியிலிருந்து கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
தொண்டி, பிப்.11-
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியிருந்து முகூர்த்த நாட்களான திருமணம், காதணி விழா, புது மனை போன்ற விஷேச நாட்களில் சிறப்பு பஸ் இயக்காததாலும், வழக்கமாக வரும் பஸ்கள் பல வராததாலும் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். குறிப்பாக குழந்தைகளை வைத்திருந்த தாய்மார்கள் மற்றும் வயதானோர் மிகவும் சிரமப்பட்டனர். இது போன்ற விஷேச நாட்களில் வழக்கத்தை விட கூடுதல் பஸ்கள் இயக்க பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.