சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
சென்னை நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற நாளை சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
நாளை பிற்பகல் 1.15க்கு மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு செல்கிறார்.
பின்னர் மாலை 3.30க்கு கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.