மணிஷ்யாம் மறைவு
மூத்த பத்திரிகையாளர், சென்னை பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர் திரு.மணி ஷ்யாம் மறைவு: சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உறுப்பினரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.பி.மணி (மணி ஷ்யாம்) (வயது 60 ) இன்று (09-03-2024) காலை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் உடல் நலக்குறைவினார் இயற்கை எய்தினார்.
விகடன்,குமுதம்,தினமலர் (நெல்லை பதிப்பு) ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றிய திரு.மணி ஷ்யாமின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் அஞ்சலி செலுத்துகிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுடன் துயரத்தை பகிர்ந்து கொள்கிறோம்.
பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்.
09-03-2024