புதுப்பட்டினம் திமுக நிர்வாகி கபீப்முகமது மரைக்கார் நினைவு அஞ்சலி

0 1,035


ராமநாதபுரம் மாவட்டம் புதுப்பட்டிணம் கபீப் முஹம்மது அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட நிர்வாகியாக பல்வேறு பொறுப்புகளில் இருந்து செயலாற்றியவர் .

தமிழ் பற்றாளர் மரக்கலம் ஓட்டிய தமிழன் என்று இப்பகுதி மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர், மக்கள் பிரச்சினைகளில் முன் நின்று போராடிவர், கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் மறைந்தார்

அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்ய பட்ட நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் திருவாடானை திமுக ஒன்றிய செயலாளர் ராஜாராம், வழக்கறிஞரும் புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவருமான முகமதுமுஸ்தபா, உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் அதன்பின் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஹபீப் முகமது அவர்களின் மகன் ஆடிட்டர் புரட்சி வேந்தன், சிந்தனை மகள் ஷகிலா, ஆயிஷா,ஆகியோர் அஞ்சலி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். டி.வி.மணிகண்டன்

Leave A Reply

Your email address will not be published.