ராமநாதபுரம் தொண்டி அருகாமையில் நம்புதாளை எனும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ள
பழமை வாய்ந்த சிவாலயத்தின் சிறப்புகளை இப்பகுதி மக்கள் சிலாகித்துக் கூறுகிறார்கள்
13ம் நூற்றாண்டில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்ற இந்த சிவசக்தி ஆலயம்,
அந்தக் காலகட்டத்தில் இப்பகுதியின் பெரிய வழிபாட்டு தலமாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது .வாலி வழிபட்ட தளம் என்றும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த கோவிலை நாம் சுற்றி வந்தால் அமைதி சூழ்ந்த இடத்தில் அம்மையும் அப்பனும் அருளாட்சி செய்வதை உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள முடிகிறது.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த கோவில் இருக்கும் இடம் இடிந்தும் புதர் மண்ணுக்குள் புதைந்தும் காணப்பட்டது அப்பகுதியில் வசித்த முத்துலட்சுமி அம்மாள் என்பவர் புதருக்குள் சிக்கியிருந்த சிவலிங்கத்தின் அருகில் சென்று சுத்தம் செய்து நீராட்டி பூஜைகள் செய்துவர அந்த அம்மையாரின் மகன் வாசு, மற்றும் இப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள்கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகமும் செய்துள்ளனர் அதேபோல மண்ணுக்குள் புதைந்த அம்பாள் சிலையும் கண்டெடுக்கப்பட்டு அம்மையை அன்னபூரணி ஆகவும் அப்பனுக்கு நம்பு ஈஸ்வரராகவும் திருநாமம் செய்யப்பட்டு கும்பாபிஷேம் செய்துள்ளனர் அதன் பின்பு கோவிலுக்கு பக்தர்கள் மற்றும்
அரசு சார்ந்த சிறு நிதி உதவியும் பெற்று இன்று கோவில் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
அருள் சூழ்ந்த இந்த இடத்திற்கு வந்து சென்ற பக்த கோடிகள் தங்களது வாழ்க்கையில் நடந்த நல்ல மாற்றத்தை உணர்ந்து அதை மற்றவர்களுக்கும் சொல்ல பக்தர்கள் தங்களது பிணிகளைப் போக்கவும் குடும்பத்தில் குறைகள் நீங்கவும் அம்மை அப்பனிடம் வேண்டிக்கொண்டு அருள் பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவ சக்தி போற்றி