திருவாடானை: இன்று கிராமங்களில் வாக்கு சேகரிக்கிறார் ஓபிஎஸ்.
கிராமங்களில் உயர்கிறது ஓபிஎஸ் செல்வாக்கு
இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பலாப்பழம் சின்னத்தில் போட்டியிகின்ற முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், இன்று திருவாடானை வட்டாரத்தில் சுமார் 18 கிராமங்களுக்கு சென்று வாக்காளர்களைசந்திக்க உள்ளார்.
இன்று காலை 8.5 மணிக்கு திருவாடானை அருகேயுள்ள சி.கே.மங்களத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்குகின்ற ஓபிஎஸ் அவர்கள், இளங்குன்றம் ஊரணிக்கோட்டை,
மங்களக்குடி,
அடுத்தகுடி, வெள்ளையபுரம்,ஓரியூர்பாண்டுகுடி திருவெற்றியூர் உள்ளிட்ட 18 கிராமங்களுக்கு சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்க உள்ளார்.அவருடன் மாநிலங்களவைஉறுப்பினர் தர்மர்,பாஜக தொழிற்பிரிவு செயலாளர் குட்லக் ராஜேந்திரன்,மாநில பொதுக்குழு ஜெயபாண்டி, மற்றும் கூட்டணிகட்சி நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரிக்கின்றனர்,
டிடிவி.மணிகண்டன்