ஜூன் மாதம் 4ம் தேதி அண்ணா திமுக தினகரன் வசம் வந்துவிடும்
2024 தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக இருக்காது என்றும் தொண்டர்கள் அனைவரும் தினகரன் பின்னால் வந்துவிடுவார்கள் என தேனியில் டிடிவி தினகரன் ஆதரித்து பிரச்சாரத்தில் அண்ணாமலை பேச்சு
தேசிய ஜனநாயக கூட்டணியின் தேனி தொகுதி வேட்பாளர் அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம்மேற்கொண்டார்
தேனி பங்களாமேடு பகுதியில் டிடிவி தினகரனை மற்றும் அண்ணாமலை இருவரும் ஒரே வாகனத்தில் நின்று பிரச்சாரம் செய்தனர் இதில் ஏராளமான கூட்டணி கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்
பின்னர் பிரச்சாரத்தில் பேசிய அண்ணாமலை
2026 ஆட்சி மாற்றத்திற்கான
அடித்தளம் தான் 2024 பாராளுமன்ற தேர்தல்
தமிழகத்தை ஸ்டாலினிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் இந்த கூட்டணி அமைந்து இருக்கிறது
அதிமுக மற்றும் திமுக இரண்டு பேரும் ஒன்றுதான் தொண்டர்கள் தான் வேறு, தலைவர்கள் ஒன்றுதான்
டிடிவி தினகரனை தோற்கடிக்க வேண்டும் என்று தேனி தொகுதியில் உள்ள அதிமுக மற்றும் வேட்பாளர்கள் இரண்டு பேரும் ஒன்றாக உள்ளனர்
பிரதமர் மோடியின் முழு அன்பை பெற்றுள்ள வேட்பாளராக டிடிவி தினகரன் இருக்கிறார்
தினகரன் வெற்றி பெற்று விட்டால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்பதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலின் இருவரும் இணைந்து தினகரன் பற்றி விமர்சித்து பேசி வருகின்றனர்
தமிழகத்தில் பல பிரச்சினைகள் உள்ள நிலையில் அதை பற்றி எல்லாம் ஸ்டாலின் பேச மாட்டார்
இந்தியாவிலேயே மத்திய அரசு அதிக வசதி ஏற்படுத்தி கொடுத்த மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான்
மத்தியில் உள்ள அரசை வலியுறுத்துவதற்காக தான் அதிமுக இருக்கின்றது
மோடியை 400 தொகுதிக்கு மேல் வெற்றி பெறாமல் தடுப்பதற்கு தான் இருக்கிறது இந்திய கூட்டணி, அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கவில்லை
வனவாசத்தை எல்லாம் முடித்துவிட்டு இன்று அரசியல் களத்திற்கு மீண்டும் வந்துள்ளார் தினகரன்
தினகரன் வெற்றி பெற கூடாது என்பதற்காக அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து மறைமுகமாக வேலை செய்கின்றனர்
2024 தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருக்காது, தொண்டர்கள் அனைவரும் தினகரன் பின்னால் வந்துவிடுவார்கள்
அதிமுகவில் காண்ட்ராக்ட் மற்றும் பணம் சம்பாதிக்கும் செய்பவர்களுக்கு மட்டுமே கட்சி நடத்தி வருகிறார்கள் எடப்பாடி பழனிசாமி, யார் இங்கு எட்டப்பன் என்று அதிமுக தொண்டர்கள் தெளிவாக உள்ளார்கள்
தமிழக மக்கள் ஊழல், குடும்ப ஆட்சி பிரஷரில் உள்ளது, இந்தப் பிரஷரில் இருந்து மக்களை விடுவிக்க தினகரன் குக்கர் வெற்றி பெற வேண்டும் என்று பேசினார்
இந்த கூட்டணி அமைவதற்கு முக்கிய காரணம் தினகரன் தான், 2026 அரசியல் மாற்றம் ஏற்படுத்துவதற்கு இந்த கூட்டணி தொடரும்
தமிழகத்தில் திமுக சாதனைகளை சொல்லி ஸ்டாலின் பேசுவதில்லை ஏனென்றால் 33 அமைச்சர்களும் போட்டி போட்டு கொண்டு லஞ்சம் வாங்குகிறார்கள்
ஜெயலலிதா எப்படி அரசியல் செய்தாரோ அதே போல் தினகரன் அரசியல் செய்கிறார் என்று அண்ணாமலை பிரச்சாரத்தில் பேசினார்
தேனி கண்ணன்