திகில்+திரில்படமாக தயாராகிறது “பீட்சா4”

0 90

எஸ் தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் K A ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் அபி ஹாசன், தெலுங்கு பிக் பாஸ் புகழ் ரத்திகா முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘பீட்சா 4’

‘பீட்சா 1’ கதையுடன் நேரடி தொடர்பு கொண்ட ‘பீட்சா 4’ திகில் மற்றும் திரில் நிறைந்த பரபர பயணமாக இருக்கும் என படக்குழு தகவல்

தமிழ் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதிய டிரெண்டை ஏற்படுத்தி தக்க வைத்துள்ள ‘பீட்சா’ வரிசையின் முதல் மூன்று பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகமான ‘பீட்சா 4’ -ஐ K A ஆண்ட்ரூஸ் இயக்குகிறார்.

எஸ். தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் பிரபல நடிகர் நாசரின் மகனும் ‘கடாரம் கொண்டான்’ மற்றும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான அபி ஹாசன் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். தெலுங்கு பிக் பாஸ் புகழ் ரத்திகா நாயகி ஆவார்.

‘எல் கே ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘கொரில்லா’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘அயலி’, ‘சூது கவ்வும் 2’, ‘யங் மங் சங்’, ‘ஃபிளாஷ்பேக்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ உள்ளிட்ட படங்களில் இணை மற்றும் துணை இயக்குநராக பணியாற்றியுள்ள K A ஆண்ட்ரூஸ், ‘பீட்சா 4’ திரைப்படத்தை இயக்குவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

“எத்தனையோ திறமையான இயக்குநர்களையும் இதர கலைஞர்களையும் உலகுக்கு அடையாளம் காட்டியுள்ள தயாரிப்பாளர் சி வி குமார் அவர்களின் திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் தங்கம் சினிமாஸ் தயாரிப்பில், ‘பீட்சா’ வெற்றி வரிசையின் நான்காம் பாகத்தை இயக்குவது மிகவும் பெருமையாக உள்ளது. முதல் பாகத்திற்கும் நான்காம் பாகத்திற்கும் நேரடி தொடர்பு இருக்கும். அது என்ன என்பது சஸ்பென்ஸ்,” என்று இயக்குநர் ஆண்ட்ரூஸ் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “‘ராட்சசன்’, ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்ட படங்களின் திரைக்கதையில் பணியாற்றிய எஸ் ஜே அர்ஜுன் ‘பீட்சா 4’ திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். வலுவான குழு இப்படத்திற்காக இணைந்துள்ளது. திரில் மற்றும் திகில் கலந்து ரசிகர்களை பரபரப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும் வகையில் ‘பீட்சா 4’ அமையும்,” என்று தெரிவித்தார்.


Leave a comment