விருதுகள் வழங்கும் விழா

0 150

சிவகங்கை மாவட்ட கலை மன்றம் சார்பில் மாவட்ட அளவில் பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கிய 30 கலைஞர்களுக்கு விருதுகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.


சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (15.03.2024) சிவகங்கை மாவட்ட கலை மன்றம் சார்பில், மாவட்ட அளவில் பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கிய 30 கலைஞர்களுக்கு விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் சிவகங்கை மாவட்ட கலை மன்றத்தின் வாயிலாக 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுகளுக்கு மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த தலா 15 கலைஞர்கள், விருதுகள் வழங்கிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 இவ்விருதுகளை  தமிழ்நாட்டின் கலைப் பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும்,  கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும், மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக 2021-2022 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிறந்த பதினைந்து கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கிட அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுகளுக்கு  விருதுகள் வழங்கிட, இதற்கென அமைக்கப்பட்டுள்ள தேர்வு குழுக்களின் சார்பில் உரிய கலைப் பிரிவுகளில் சிறந்து விளங்கிய கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில்  இன்றைய தினம்  மாவட்ட ஆட்சியர் அலுவலக  கூட்டரங்கில்,  2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுகளுக்கு  தலா 15 கலைஞர்கள் விதம், கலை இளமணி, கலை வளர்மணி ,  கலைச்சுடர்மணி,  கலைநன்மணி மற்றும்  கலைமுதுமணி என கலைப்பிரிவுகளில் சிறந்து விளங்கிய மொத்தம் 30 கலைஞர்களுக்கு விருதுகள்  வழங்கப்பட்டுள்ளது.  இன்றைய தினம் விருதுகளை பெற்றுள்ள அனைத்து  கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கலைத்துறையில் சிறந்து விளங்கி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கின்ற வகையிலும் அவர்களை கௌரவிக்கின்ற வகையிலும் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதனடிப்படையில் அரசின் திட்டங்களின் வாயிலாக பயன்பெற்று வரும் கலைஞர்கள், இனிவரும் காலங்களிலும் தங்களது கலைப்பிரிவுகளில் மேலும் சிறந்து விளங்கிட வேண்டும்.

மேலும், தமிழகத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையிலும், நமது கலச்சாரத்தை உலகிற்கு எடுத்துரைக்கின்ற வகையிலும் சிறப்பான நடிவடிக்கைகளில் தங்களை முழுமையாக அர்பணித்து கொண்டு செயலாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கலை பண்பாட்டுத்துறையை சார்ந்த அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழகமெங்கும் மேடைநாடகங்களில் நகைச்சுவை நடிகர்களாக மக்களின் மனதில் சிறப்பான இடத்தைப் பெற்ற A.R.ஆறுமுகம்,சகலவேடநாயகன் ஹரிகரன்,ஆகியோருக்கும் கலைநன்மணி விருதுகள் வழங்கப்பட்டது, விருதுகள் பெற்ற இருவரும் நாடகங்களின் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை பதிவு செய்கின்றவர்கள் விருதுகள் பெற்ற அனைவருக்கும் நமது பாராட்டுக்கள்.

இளங்கவி, டி.வி.மணிகண்டன்

Leave A Reply

Your email address will not be published.