மதிமாறன் பட பாடலாசிரியர் பாலாவின் அடுத்த படைப்பு
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, தற்போது OTT தளங்களான அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா தளங்களில் முன்னணியில் இருக்கும் ‘மதிமாறன்’ திரைப்படத்தில் வரும் ‘பூலோகமே ஒரு சொர்க்கமானதே’ என்ற செவிக்கினிய, மனதை வருடும் பாடல் கார்த்திக்ராஜாவின் அற்புதமான இசையில், சித் ஸ்ரீராம் பாடிய அந்தப் பாடலை எழுதிய பாலா சீதாராமன், மீண்டும் ஷாலோம் ஸ்டுடியோஸ் திரு.ஜான் மேக்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நாஞ்சில் அவர்களின் இயக்கத்தில், ஆன்ட்ரியா நடித்த ‘கா’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் சுந்தர் சி.பாபு,
அதிர வைக்கும் இசையில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அப்பாடலை கிடாக்குழி மாரியம்மாள் கோலட் தேவராஜ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
பாலா சீதாராமன்இந்த ஆண்டின் ஆகச்சிறந்த பாடலாசிரியராக வலம் வரவும், “கா” திரைப்படம் வெற்றி பெறவும் எமது அதிகாலைக் குழுமம்,www.mtamilnews.com மற்றும் மதுரைதமிழன் வானொலியும் நெஞ்சார வாழ்த்துகிறது.
‘கா’ திரைப்படம் இம்மாதம் மார்ச் 29 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அதிகாலை நவின் ,.டிவி.மணிகண்டன்