பிரபலநகைசுவை நகைச்சுவை நடிகர் போண்டாமணி திடீர் மரணம் மடைந்தார் மக்கள் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகர்களில் போண்டாமணி யும் ஒருவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் நடிகர் போண்டா மணி. இவர் 1991ம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் ‘பவுனு பவுனுதான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன்பிறகு ஏராளமான திரைப்படங்களில் அவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட 150க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த அவரது காட்சிகள் அனைவரையும் கவர்ந்தது. ஏற்கனவே இரண்டு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய போண்டாமணி டயாலிசிஸ் சிகிச்சை வீட்டிலிருந்து பெற்று வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் அரசு இன்று மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய இருந்த நிலையில் நேற்று இரவு திடிரென்று மயக்கம் வருவதாக தெரிவித்தவர் பின்பு சுயநினைவு இழந்தார் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் மறைந்த நடிகர் போண்டா மணிக்கு 61 வயது மறைந்த நடிகர் போண்டாமணி வடிவேலு உடன் நடித்த நகைச்சுவை கதாபாத்திரம் மக்களால் பெரிதும் பேசப்பட்டது