மங்களக்குடி அருகே நடந்த கும்பாபிஷேகம்
தொண்டி, மார்ச்.3-
ராமநாதபுரம் மாவட்டம், மங்களக்குடி அருகே கீழக்கோட்டையை அடுத்துள்ள ஜீவதண்ணீர்பந்தல் பகுதியில் அப்பகுதி மக்களின் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கும்ஸ்ரீ இருளாயி அம்மன்,ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது. திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.கருமாணிக்கம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். முன்னதாக யாகசாலையில் வைக்கப்பட்ட கும்பத்தில் உள்ள புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் கலந்துகொண்டனர்.