இராமநாதபுரம்:மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இராமநாதபுரம், மார்ச், 2 –
இராமநாதபுரம் மாவட்டம்
இராமேஸ்வரம் அருகே உள்ள கடலோர கிராமமான வேதாளையில் ரூ.24 லட்சம் செலவில் துணை சுகாதார நிலையக் கட்டிடத்தை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியானது மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்க்கீஸ் தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம், பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ.முருகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ரவிச்சந்திரராமவன்னி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேதாளை பஞ்சாயத்து தலைவர் அல்லாப் பிச்சை அனைவரையும் வரவேற்றார். மருத்துவ, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். மேலும் ரூ25 லட்சம் செலவில் மகப்பேறு பிரிவு, ரூ25 லட்சம் செலவில் ஓரிக்கோட்டை, ரூ24 லட்சம் செலவில் கீழக்கரை பாத்திமா காலனி உட்பட மொத்தம்ரூ 1 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு மருத்துவகட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது. மேலும் பரமக்குடியில் 9 மருத்துவமனை கட்டிடங்கள் திறக்கப்பட்டது. யூனியன் கவுன்சிலர் தெளபிக் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் வேதாளை ஐக்கிய ஜமாத் தலைவர் முத்துப் புல்லா நன்றி கூறினார் _. .. .
ஜெயந்தன் தொண்டி