திருட்டுக் கும்பலைப் பிடிக்க சென்றதமிழக காவல்த்துறையினர்மீது லஞ்சப்புகார் ! பொய்புகார் கொடுத்த திருட்டுகும்பல்!!
ராஜஸ்தானில் தமிழக காவல்துறையினர்
திருட்டுக் கும்பலைப் பிடிக்க சென்றபோது
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலைப் பிடிக்க ராஜஸ்தான் சென்ற இடத்தில் தமிழ்நாடு தனிப்படை காவல்துறையினர் அந்த மாநில காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் தமிழகமெங்கும் அதிர்ச்சியடைய ஏற்படுத்தியது
இந்த நிலையில் இது தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சியில் திருட்டு சம்பவம் தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த சோனியா மற்றும் அவரது கணவரை திருச்சி காவல்துறையினர் தேடி வந்தனர்.
ஆனால், அவர்கள் ராஜஸ்தான் தப்பி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து இந்த திருட்டுக் கும்பலைப் பிடிக்க ராஜஸ்தானுக்கு செல்ல திருச்சி போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி, காவல்துறை ஆய்வாளர் மோகன் தலைமையிலான 12 பேர் கொண்ட தனிப்படை காவலர்கள் ராஜஸ்தான் விரைந்தனர்.
ராஜஸ்தானில் உள்ள ஹிஜ்மர் நகரத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக தமிழ்நாடு காவல்துறையினர் மீது ராஜஸ்தானை சேர்ந்த அந்த தம்பதி அம்மாநில லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தது.
அந்த புகாரில், திருட்டு வழக்கில் கைது செய்யாமல் இருப்பதற்காக தமிழ்நாடு காவல்துறையினர் 25 லட்சம் லஞ்சம் கேட்பதாக கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து, தமிழ்நாடு காவல்துறையினர் 12 பேரையும் ராஜஸ்தான் காவல்துறையினர் சிறை பிடித்ததாக தகவல் வெளியானது.
திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்கச் சென்ற இடத்தில் தமிழ்நாடு காவல்துறையின் 12 நபர்கள் சிறைபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நகை கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய ராஜஸ்தான் சென்ற தனிப்படை காவல்துறையினர் சிறைபிடிக்கப்பட்டதாக பரவிய தகவலில் உண்மையில்லை என்று தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்யபிரியா செய்தியாளர்களுக்கு சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “ஏழு வழக்குகளில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளை கடந்த நவம்பர் மாதம் திருச்சி காவல்துறை கைது செய்தது.
அதில் அவர்களின் கை ரேகைகளும் ஒத்துப்போனது.
அது சம்பந்தமாக அவர்களிடம் விசாரிக்கும் போது அவர்கள் கொள்ளையடித்த பொருட்கள் ராஜஸ்தானில் கொண்டு போய் கொடுத்து விட்டனர்.
எனவே, அந்த நகைகளை மீட்பதற்காக உதவி காவல் ஆணையர் கென்னடி தலைமையில் 15 காவல்துறையினர் சென்றனர்.
கடந்த 2 ஆம் தேதி ராஜஸ்தான் சென்றடைந்தனர்.
300 கிராம் நகைகள் மீட்கப்பட்டது. அடுத்து இன்னொருவரிடம் நகைகளை மீட்க பேசிக்கொண்டு இருந்தோம்.
அவர்கள் இங்கே உள்ள வழக்கின் படி 100 சவரன் கொடுக்க வேண்டும்.
ஆனால் அவ்வளவு கொடுக்க முடியாது. 50 சவரன் தான் கொடுப்பேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தனர்.
அதை பணமாகத்தான் கொடுக்க முடியும் என்று சொல்லியிருந்தனர்.
அதற்குள் நமது காவல்துறையினர் இங்கே வரவேண்டியிருந்தது.
இதனால், அழைத்து செல்லப்பட்ட குற்றவாளிகளை அழைத்துக்கொண்டு 3 காவல்துறையினர் விமானம் மூலமாக தமிழ்நாடு வந்துவிட்டனர்.
ராஜஸ்தானில் இருந்த ஏனைய 12 காவல்துறையினர் பணத்தை வாங்க சென்ற போது, அதை தவறாக காவல்துறையினர் தங்களிடம் பணத்தை கேட்கிறார்கள் என்று திரித்து விட்டனர்.
காவல்துறையினர் பணத்தை வாங்க செல்லும் போதே, அங்குள்ள ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறையில் புகார் கொடுத்ததாக தெரிகிறது.
நமது காவலர்கள் சென்ற போது அங்குள்ள அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தனர்.
அதன்பிறகு எங்களிடம் பேசிய பிறகு அலுவல் ரீதியாகத்தான் போயிருக்கிறார்கள்.குற்றம் செய்து எடுத்துக்கொண்டு சென்ற நகை, அதை மீட்டு வாங்கத்தான் சென்றார்கள். இதை தவறாக கூறியிருக்கிறார்கள் என்று நாங்கள் விளக்கம் அளித்தோம்.
அதன்பிறகு அங்குள்ள அதிகாரிகள் வழக்கு விவரங்களை கேட்டார்கள்.
அதை ஆய்வு செய்த பிறகு வழக்கில் உள்ள நகைகளை மீட்கவே வந்து இருக்கிறார்கள் என்று உறுதி செய்து நமது காவல்துறையினரை அங்கிருந்து அனுப்பி விட்டார்கள்” என்று விளக்கமளித்தார். இது போன்ற திருட்டு வழக்குகளை விசாரிக்க செல்லும் போலீஸார் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தும் திருட்டு கும்பல் இந்த முறை திட்டமிட்டு தமிழக போலீஸாரை சிக்க வைத்து அவர்கள் தப்பிக்க நினைத்திருக்கலாம் அதற்க்குள் உண்மையை ஆராய்திடாமல் சில அவசர குடுக்கை ஊடகங்கள் செய்தி பரப்பி பரபரப்பாக்கிவிட்டது.
மணிகண்டன்