அலட்சியபடுத்தினால் அயராது எங்களின் லட்சியப்பயணம்! வி.கே.வி.துரைச்சாமி
தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு.. நாடுமுழுவதும் அரசியல்வாதிகள் வெவ்வேறு வகையாக பேசுவதையும் சிலகாலம் கழித்து நான் அப்படிப்பேசவில்லை ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டுவிட்டார்கள் என்பதும்.நான் அந்த சந்தர்ப்பத்தில் அப்படி பேசினேன் என்பதும்.இப்போது அரசு நிதிபற்றாக்குறை அதனால் செய்ய முடியவில்லை என்பதும் . ஆனால் புதிதாக மனதில் தோன்றிய எண்ணத்திற்கு செயலவடிவம் கொடுக்க புதிய அறிவிப்பு கொடுத்து.பலநூறு கோடி செலவிடுவதும். அதை அமைதியாக ஏற்றுக்கொள்வதும்.இந்திய அரசியல்வாதி களின் செயலாக இருந்து வருகிறது.
உதாரணத்திற்குஇந்திய விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து ஓர் ஆண்டுகாலம் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள்
இதற்கு ஆதரவாக ஆட்சிப்பொறுப்பில் இல்லாத அரசியல் கட்சிகள் அனைத்தும ஆதரவு கொடுத்தன..
அப்போது
என்னவெல்லாம் பேசினார்கள்
ஆட்சியில் இருந்தவர்களைப்பற்றி
அடிமைகள்
முதுகெலும்பு இல்லாதவர்கள்
கோழைககள்.
விவசாயிகளின் விரோதிகள்
இன்னும் என்னவெல்லாமோ .
ஓராண்டுபோராடிய
பலவிவசாயிகள் உயிரைபறித்த பின்
விவசாயிகள் மீது காரையேற்ற கொன்ற பின்.
மத்திய அரசு
பிரதம அமைச்சர் அவர்கள்.
வேளான் விரோத சட்டங்களை திரும்ப பெருகிறேன்.
குறைந்தபட்ச விலை நிரணயம் செய்ய
உத்திரவாதம் அளிக்கிறேன்.
விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுகிறேன் என்று அறிவித்தார்
விவசாயிகள் இ போராட்டம்
ஒத்திவைக்கப்பட்டது.
ஓராண்டு ஓடிவிட்டது
பிரதமரின் அறிவிப்பைநிறைவேற்ற எந்த அறிவிப்பும் வராதநிலையில்.
அன்று எதிர்க்கட்சியாக இருந்த இன்று ஆட்சிப்பொறுப்பிற்கு வந்துள்ள இந்தியாவின் பல்வேறு மாநில ஆட்சியாளர்கள்எவரும் இந்திய பிரதமருக்கு நீனைவூட்டு கடிதம் கூட எழதமுடியாதவர்கள் அல்லது
தங்கள் கட்சியின்நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் பாராளுமன்றத்தில் இந்த விவசாயப்பிரச்சினையை பேசாமல் என்ன காரணத்தினால் இருந்தார்கள்
என்று சொல்லமுடியவில்லை.
இதையெல்லாம் கவனித்த
தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு.. விவசாயிகள் நலனில் அக்கறை கொன்டவரானதால் காலமறிந்து இடனறிந்து. இந்தியா முழுதும் டெல்லி போராட்டத்தை நடத்திய விவசாய போராளிகளை சந்தித்து இந்தப்பிரச்சினையை இந்தியா முழுமைக்கும் எடுத்துச்சொல்லி மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்வது என்ற முனைப்போடுதான். நீதி கேட்டு நெடும்பயணம் என்று தலைவர் திரு பி .ஆர்.பாண்டியன் அவர்கள் அறிவித்து கன்னியாகுமரி யில் தொடங்கிய பயணம் கேரளா.முதலமைச்சரை சந்தித்து ஆதரவு கேட்டுப் பெற்றுக்கோன்டு .தமிழ்நாடுவந்து முதலமைச்சரை சந்திக்க முயற்ச்சித்து அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். புரட்சியாளன் அவமானங்களையும் அவுதூறுகளையும் அலட்சியங்களையும் கண்டு ஒதுங்கிவிட முடியாதுஎன்ற இலட்சியத்தை தலைவர் திரு .பி.ஆர்.பாண்டியன் அவர்கள் அறிந்திருந்ததால் இதை உதறிதள்ளிவிட்டு . ஏற்ற கருத்தினை வெற்றிபெறச்செய்திடதொடர்ந்த அடுத்தமாநிலமான தேலுங்கானா பயணத்தை முடித்துக்கொன்டு சட்டீஸ்கர் மாநிலம் நொக்கி நீதி கேட்டு நெடும்பயணம் தொடர்கிறது.