பாஜகவுக்கு எதிராக ஒன்றுதிரள வேண்டும். முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
திமுக ஆட்சியை அகற்ற சிலர் சதி செய்து வருகின்றனர்- நாகர்கோவிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.
திமுக ஆட்சியை அகற்றுவதற்கு எங்காவது கலவரத்தை ஏற்படுத்தலாமா என சிலர் சதி செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். மதக்கலவரத்தை தூண்டலாமா, சாதி கலவரத்தை ஏற்படுத்தலாமா என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர்.
நாட்டை பிளவுபடுத்தும் எண்ணத்தில் உலவிக் கொண்டிருக்கும் சிலர் நம் மீது புழுதி வாரி தூற்றுகிறார்கள்.
தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் நம் மீது விமர்சனங்களை வைக்கின்றனர்.
தொடர்ந்து திமுக ஆட்சியில் இருந்தால் நம் பிழைப்பு என்னாவது என சிலர் நினைக்கின்றனர்.
திமுகவினர் நமக்குள் உள்ள பிரச்னையை தூக்கி வைத்து விட்டு ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்.
தமிழ்நாட்டை மட்டுமல்ல நாட்டையும் நாம் காப்பாற்ற வேண்டும், இதற்கு அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒன்றுதிரள வேண்டும்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.